தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சமயம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(அக்டோபர் 2008)
ஆசிரியர் :
பரமசிவன், தொ
பதிப்பகம் : தென்திசை பதிப்பகம்
Telephone : 914424338169
விலை : 70
புத்தகப் பிரிவு : உரையாடல்
பக்கங்கள் : 128
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
சமயம் குறித்து சுந்தர் காளியுடன் நடத்திய உரையாடல் நூல் வடிவில். இதுவரை பேசப்படாத செய்திகளும், நிகழ்வுகளும் இந்த உரையாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகத்தில் ஆழ வேரோடிக் கிடக்கும் தாய்த் தெய்வ உணர்வுகள் மென்மையானவை, ஆனால் வலிமையானவை.சமயம் என்ற பொருள் உணர்த்தும் வாழ்வியல் அசைவுகள் எளிய தமிழ் மக்களுடன் இசைந்து செல்லாதவை. இவற்றை விரித்துப் பேசும் கூர்மையான உரையாடல் நூல் வடிவமாக்கப்பட்டுள்ளது.
ஊடக மதிப்புரைகள்
1 2 3 4
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : ஆனந்தவிகடன்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : ஆசிரியர் குழு

தமிழில் நாட்டார் சமயம் குறித்த ஆழமான ஆய்வுகளை முன்வைத்த பேராசிரியர் தொ.பரமசிவன், கோயில்களின் பிரமாண்டாமான அமைப்புகளுக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வுகளைச் செய்த பேராசிரியர் சுந்தர்காளி இருவரும் சமயம் குறித்து உரையாடும் உரையாடலின் தொகுப்பு. மனிதர்கள் மதம் என்கிற ஒன்று இல்லாமல் வாழ முடியுமா, மதம் என்பது எப்போதும் அதிகாரத்தோடு தொடர்புடையது தானா போன்ற கேள்விகளை முன்வைத்து உரையாடல் நகர்கிறது. தெய்வ நம்பிக்கை என்பது வேறு, சமயம் என்பது வேறு என்கிறார் தொ.பரமசிவன். தனி மனிதர்களின் நம்பிக்கைகள் என்பதைத் தாண்டி மனிதுறவுகளைச் சிதிலமடையச் செய்யும் அளவு மத மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், மதங்களின் வேர்கள் மற்றும் சமூக வாய்க்கையில் அதன் பங்கு குறித்து ஆரோக்கியமான உரையாடல், அவசியாமான புத்தகம்.. - - 2008.11.08 - -

1 2 3 4

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan