தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கதையல்ல நிஜம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
மகாதேவா, கே.ஜி
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 80
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 232
ISBN : 8789748327
புத்தக அறிமுகம் :
யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகைக் காரியாலயத்திலும், பின்னர் கண்டி 'செய்தி' பத்திரிகை அலுவலகத்திலும் பணியாற்றிய காலங்களில் ஆசிரியிரின் மனதில் பட்டுத் தெறித்த அத்தனை விடயங்களையும் தொகுத்துத் தந்துள்ளார். இவை எல்லாம் மனதைக் குடையும் சுவாரஸயமான சுகானுபவங்கள்.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : இனிய நந்தவனம்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : பீர்முகம்மது

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்ற எழுத்தாளர் கே.ஜி.மாகதேவா எழுதிய சிரிக்க, சிந்திக்க, திகைக்க என தினம் ஒரு தகவலாக ஈழநாடு பத்திரிக்கையில் எழுதிய 233 துணுக்குச் செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கும் நூல். "கதையல்ல நிஜம்" இலங்கையில் 1981-ல் பத்திரிக்கை அலுவலகம் தீக்கிரையான சம்பவமும், "துப்பாக்கி தூக்கிய ஆதீனம்" என்ற தலைப்பில் உருத்திராட்ச மணிகளை வருடிய மதுரை ஆதீனத்தின் கைகளே துப்பாக்கிக் குண்டுகளை உருட்டுவதானால்..? என்ற தகவலும், "அன்றைய பாக்-காஷ்மீர்" என்ற செய்தியில் 1990-ல் காஷ்மீரின் கொடுபிடியை குறித்து விளக்கும்போது, இன்று இந்தியா காஷ்மீர் உடன்பாடு வித்தியாசமான அணுகுமுறையை நமக்கு உணர்த்தும். இதுபோன்ற சுவாரஸ்யமான பொது அறிவுத் தகவல்களைத் திரட்டிக் தொகுத்தும், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 2006-ல் நூலாசிரியர் கே.ஜி.மகாதேவா எழுதிய நினைவலைகள் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியின் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது. - - - ஜனவரி 2008 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan