தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
இராகவன், அ சாத்தன்குளம்
பதிப்பகம் : அமிழ்தம் பதிப்பகம்
Telephone : 914424339030
விலை : 120
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 192
புத்தக அறிமுகம் :
இந்தியாவிலே நடைபெற்ற ஆய்வுகளிலே ஆதித்த நல்லூர்ப் பறம்பில் நடைபெற்ற அகழாய்வு, முதல் அகழாய்வாகும். இந்த ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள்தாம் உலகிலேயே மிகவும் தொன்மையான பொருள்களாக கருதப்படுகின்றன. அப்படியான ஆதித்த நல்லூர் பற்றிய ஆசிரியரின் ஆய்வு
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : 2006.06.01
மதிப்புரை வழங்கிய இதழ் : பதிப்புத் தொழில் உலகம்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : மைதிலி

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை 1876இல் முதன் முதல் அகழ்வாய்வு மேற்கொண்டது. இவ்வகழ்வாய்வு ஆதித்தநல்லூர் அகழ்வாய்வாகும்.

உலகில் இது வரை அறியப்பட்ட தொல்பழம் நாகரிகங்கள் குறித்தத் தரவுகளோடு, ஆதித்தநல்லூர் தரவுகளை ஒப்பிட்டுக் காணும்போது இந்நிலப்பகுதியின் பழமை குறித்த கருத்தாக்கம் உறுதிப்படுகிறது. இவ்வகையில் ஆதித்தநல்லூர் அகழ்வாய்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகிறது.

இந்நிகழ்வை முதன் முதலில் தமிழில் விரிவாகப் பதிவு செய்த சிறப் பை இந்நூல் பெறுகிறது. ஆதித்த நல்லூரில் அகழ்வாய்வு மூலம் கிடைத்த ஈமத் தாழிகள் தென்னிந்தியப் பண்பாட்டு வரலாற்றை அறிவதற்கு உதவுவதை இந்நூல் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது. இரும்புக் காலம் மற்றும் வெண்கலக் காலம் ஆகியவற்றை அறிகிறோம். இவ் வகழ்வாராய்வில் கிடைத்த மட்பாண்டங்கள் மூலம் தமிழ் எழுத்து வடிவங்கள் கிடைத்துள்ளன. தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல்.

 

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan