தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கோநகர் கொற்கை
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
இராகவன், அ சாத்தன்குளம்
பதிப்பகம் : அமிழ்தம் பதிப்பகம்
Telephone : 914424339030
விலை : 100
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 160
புத்தக அறிமுகம் :
தமிழர்களின் புழங்குபொருள் பண்பாடு குறித்து விரிவான ஆய்வுகள் இன்னமும் நிகழ்த்தப்பெறாத நிலையில், நுண்கலைச் செல்வர் சாத்தன்குளம் அ.இராகவன் அவர்களால் எழுதப்பட்ட நூல் ஆகும். கொற்கை நகருக்கு யவனர் வருகை, அதன்மூலம் ஏற்பட்ட வணிகம், இங்கு நடைபெற்ற முத்துக்குளிப்பு, அம்முத்துக்கள் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டமை, காசுகள் அச்சடிக்கப்படும் அஃகசாலை உருவாக்கம் என்பனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : பதிப்புத் தொழில் உலகம்
மதிப்புரை வழங்கியவர் பெயர் : மைதிலி

பாண்டியர்களின் தலைநகரமாக விளங்கியது கொற்கை. இந்த நகர் குறித்த தகவல்களை அறிவதற்கு இதுவரை செய்யப்பட்ட பல்வேறு அகழ்வாய்வுகளில் உள்ள செய்திகளை ஆசிரியர் தொகுத்துள்ளார். தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கொற்கை குறித்த செய்திகளையும் விரிவாகத் தொகுத்து அவற்றை ஆய்வு செய்கிறார். அதன் மூலம், பாண்டியர்கள் குறித்த விரிவான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொற்கையை ஆண்ட மன்னர்களின் துறைமுகமே காயல். இக்காயல் குறித்த மிக விரிவான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொற்கை நகருக்கு யவனர் வருகை தந்தமை, அதன் மூலம் ஏற்பட்ட வணிகம், கொற்கை சார்ந்த முத்துக்குளிப்புத் தொழில், காசுகள் அச்சடிக்கும் அச்சாலை உருவாக்கம் ஆகிய பிற செய்திகளும் இந்நூலில் உண்டு. தமிழ்ச் சமூக வரலாற்றை அறிய உதவும் சிறப்பான நூல் இந்நூல் என்றால் மிகையாகாது. - - - ஜூன் 2006 - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan