தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழர் நாடும் தனிப் பண்பாடும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற்பதிப்பு (2005)
ஆசிரியர் :
நந்திவர்மன், புதுவைnandhivarman@gmail.com
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 144
புத்தக அறிமுகம் :
ஊடக மதிப்புரைகள்
1
மதிப்புரை வெளியான நாள் : update
மதிப்புரை வழங்கிய இதழ் : தென் செய்தி
மதிப்புரை வழங்கியவர் பெயர் : பேராசிரியர் அ. அய்யாசாமி

இலக்கியம், மொழியியல், வரலாறு, மானிடவியல், மரபியல், புவியியல் என்று பல துறை ஆய்வுகளின் தொகுப்பான இந்த நூலில் தமிழுக்கும் தமிழியக்கத்திற்கும் ஆக்கம் தரத் தக்க வகையில் உலகெங்கனும் நடைபெற்றுள்ள ஆய்வுகளைப் பட்டியிலிட்டுக் காட்டுகிறார் நந்திவர்மன். பட்டியல் நம்மை மலைக்க வைக்கும் அளவுக்கு நீளமானது. பூமி முழுவதும் ஒரே கண்டமாக இருந்ததற்கான ஆதாரங்களைத் தொகுத்துக் காட்டி இந்தக் கருத்து தமிழகத்தைச் சேர்ந்த வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் எழுதிய "வரலாற்று முன்னைத் தென்னிந்தியா' என்னும் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார். சென்னையை ஒட்டிய பூண்டியில் இலட்சம் ஆண்டுக்கு முன்பு தமிழன் வாழ்ந்தான் என்ற ஆய்வு முடிவு "நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளில் வெளியாகி இருக்கிறது என்பது பெருமைக்குரிய செய்தி. மொழியிலாளர்களும் மரபியலாளர்களும் மேற்கொண்ட ஆய்வுகள் மாந்தனின் பேச்சுத் திறனுக்குக் காரணமான முதல் மரபணுவைக் கண்டறிந்திருக்கின்றன. அவற்றை மொழியியல் துறையில் நடைபெற்றுள்ள ஆய்வுகளுடன் இணைத்துப் பார்த்து உலகின் முதல்மொழி தமிழாகவே இருந்திருக்க வேண்டும் என்று இவர் நிறுவுகிறார் இந்தியா, பர்மா, ஆப்கானிஸ்தானம் முதல் வியத்நாம் வரை உள்ள மலைகளின் உயரம் கண்டறிவதற்குப் பயன்பட்ட கருவி பரங்கிமலையில் படைக்கப்பட்டது என்பதும் அதனை வடிவமைத்தவர் ஆர்க்காடு சையத் உசேன் என்ற தமிழர் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்? அரப்பா நாகரித்தைப் பற்றிய ஆய்வுகள் போலவே கடலுள் மூழ்கிய குமரிக்கண்டம் முதலில் தென்பகுதியைப் பற்றிய கடலாய்வு தேவை என வலியுறுத்துகிறார். மொழியியலில் மிகப் பெரிய கண்டுபிடிப்புகளைச் செய்துள்ள சாத்தூர் சேகரன், மதிவாணன் ஆகிய அறிஞர்களைத் தமிழகம் போற்ற மு:னவரவில்லையே என்று வேதனைப்படுகிறார். தாய்மொழி மீட்பிற்காகச் சின்னஞ்சிறு பகுதிகள்கூடக் கிளர்ந்தெழுந்த வரலாறுகளைக் கூறி நாமும் தமிழைக் காக்க எழ வேண்டாமா? என வினவுகிறார். "மாந்த இனத்தின் தொட்டிலையும் நம் தாயகத்தையும் தேடும் முயற்சி தொடங்கட்டும். உண்மைகள் நமக்காகக் காத்துள்ளன. உண்மைகளைத் தேடி நாம் நடைபோட வேண்டும், "என்று அறைகூவல் விடுக்கும் இந்த நூலைத் தமிழ் உணர்வுள்ள ஆய்வாளர்கள் அனைவரும் கட்டாயமாகப் படித்து அதில் கண்டுள்ள ஆய்வுகளைச் சுணக்கமின்றி மேற்கொள்ளுமாறு பல்கலைக் கழகங்களையும் பிற அமைப்புகளையும் தூண்ட வேண்டும். - - - சனவரி 16, 2007 - - - -

1

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan